பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 இசைக்கருவிகளைச் செய்யும் கைத்திறன் நுட்பமான தாகும். இதை எங்கோ சிலரிடமே, காண்கிருேம் அரிதாகிய கைவண்ணத்தால், ஒருவர், வீணையைச் செய்கிரு.ர். அறிவையும் திறமையும் உணர்வையையும் ஒருமுகப்படுத்திச் செய்யப்பட்ட அவ்வீணை நல்லதாகவும் அமைகிறது. அது செல்வர் வீட்டுக் காட்சிப்பொருளாக நின்று விடலாமா? ஆகாது. வாழ்ந்த இசைஞரை நினைவுபடுத்தும் நினைவுச் சின்னமாக நிற்கலாமா? ஆகவே ஆகாது. புழுதியில் போட்டுவிடும் குப்பையா அது? இல்லை! நல்லதோர் வீணை செம்மையாகிப் பயன்பட வேண்டும். வேடிக்கைப் பொருளாக அல்ல; வேறு வகையாக. இசை பொழியும் கருவியாகும்போதே, அது, பிறவிப்பயனை' அடைகிறது. - பிறவிப்பயனை அடைய நன்ருகச் செய்யபடுதல் போதாது. அதைத் தடவி இசை எழுப்பக்கூடிய திறமை யாளரிடம் அது சிக்கவேண்டும். அது மட்டுமா? மற்முென் றையும் கவனிக்க வேண்டும். சரியாகச் செய்த வீணையைத் திறமையாக இயக்கத் தெரிவதோடு, எதற்கு வாசிக்கவேண்டும் என்பதையும் தெளிந்தவர் கையில் அது பயன்படவேண்டும். அப்போது அவ்வீணைக்குச் சிறப்பு: அந்நிலையிலேயே, அது, இன்ப முட்டும்; உயர்த்தும்; அமைதிப்படுத்தும். பாரதியார் தன்னம்பிக்கை நிறைந்தவர். தன்னிடம் அறிவு இருப்பதை உணர்ந்தவர்; அவ்வறிவு மொக்கை யல்ல; ஒளிவிடும் கூர்மையுடையது. அது காட்சிப் பொருளாக நின்று பாழாகக் கூடாது. 'இப்படிப்பட்ட பேரறிஞன் எங்களில் இருந்தான் என்று