பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 கறுப்பையும் வெண்மையையும் அடுத்து வைப்பது போல் யோக சித்தி' என்னும் பதிகத்தில் இரு பாடல்களைப் பார்ப்போம். தேடிச்சோறு நிதந்தின்று-பல சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம் வாடித்துன்ப மிக உழன்று-பிறர் வாடப் பல செயல்கள் செய்து-நரை கூடிக்கிழப் பருவமெய்தி-கொடுங் கூற்றுக்கிரை யெனப்பின்மாயும்-பல வேடிக்கை மனிதரைப்போல-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" வேடிக்கை மனிதராக விரும்பாவிட்டால், வேறு எதை வேண்டுகிருர்? தோளை வலியுடைய தாக்கி-உடற் சோர்வும் பிணிபலவும் போக்கி-அரி வாளைக்கொண்டு பிழந்தாலும்-கட்டு மாருவுடலுறுதி தந்து-சுடர் காளைக்கண்டதோர் மலர்போல்-ஒளி கண்ணித்திகழு முகந்தந்து-மத வேளை வெல்லும் முறைகூறித்-தவ மேன்மை கொடுத்தருளல் வேண்டும்: என்று பாரதியார் வேண்டுகிரு.ர். "நல்லதோர் வீணை"யின் முதற் பகுதியைக் கேட்டுத் தெம்பு கொண்டது போல், யோக சித்தியின் இவ்விரு பாடல்களைக் கேட்டும் புத்துணர்ச்சி பெற்று, உலகிற்குப் பயன்படும் மக்களாக, அன்றைய நாளில் உயர்ந்து நின்ற ஆசிரியர்கள் பல்லாயிரவர் ஆவர். அச்சிறப்பு. ஆயிரம் மேடைகளில் இவற்றை ஒப்புவித்த எனக்குச் சேராது. மந்திர சக்தியுடைய பாடல்களைப் பாடிய பாரதிக்கே, உரிய தாகும்.