பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 நினைப்பதெல்லாம் நடப்பதில்லை, நடப்பதெல்லாம் நல்லதாக இருப்பதும் இல்லை. கிட்டியது தவறிப்போகும், முயன்றது முடியாமற் போகும். அணேக்க வேண்டியவர்கள் அடிப்பார்கள். ஒன்றி யிருக்க வேண்டியிருப்பவர்கள், பிரிந்து நிற்பார்கள். அதைவிடக் கொடுமை, கூடிக்குலாவிக் கொண்டே. குழி பறித்தலில் ஈடுபடுவார்கள். இவை எல்லோர் வாழ்விலும் உண்டு. இவற்றைச் சந்திக்காத எளியவர்க.ட இல்லை; பெரி யவர்கள் எப்படித் தப்ப முடியும்? முன்னர் நிகழ்ந்துவிட்ட தீமையை, உயர்ந்துவிட்ட பிறகும் நினைந்து, துருப்பிடிக்கச் செய்து பாழாகும் மனிதர்களை வீட்டுக்கு வீடு காணலாம். அது வாழும் முறையாகாது. அது நம்மை, நம் எதிர்காலத்தை, அரித்துவிடும். தீமை களே நன்மைப் பயிருக்குச் சாணமாக்கத் தெரிந்தால், அடுத்து நடப்பது நல்லதாக இருக்கக்கூடும். எனவே, போனது போனதாகவே இருக்கட்டும்: முயல்வது முழுமையாக இருக்கட்டும்' என்று நாம் வாழ வேண்டும். சென்றதினி மீளாது, மூடரே! நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று ரீவீர் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்று விளையாடியின்புற்றிருந்து வாழ்வீர் தீமையெல்லாம் அழிந்துபோம், திரும்பி வாரா இப்பாடல் புண்ணுக்கு மருந்து நலத்திற்கு 'வைட்டமின்’ மாத்திரை,