பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 அந்நிலையில் எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யோம். நஞ்சு கலவாத அன்பு வாழ்க்கையில் எதைப் பெறுவோம்? அஞ்சாமையை அடைவோம். அஞ்சாமை, மானிட முதிர்ச்சியின் மற்ருேர் அடையாளம். அதையும் பெற்று, மொய்க்கும் கவலைப் பகை போக்கி, இன்ப வாழ்வு வாமு, மகாகவி பாரதியாரோடு சேர்ந்து, 'அச்ச மில்லை, அமுங்குதலில்லை, நடுங்குதலில்லை, காணுத லில்லை பாவமில்லை, பதுங்குதலில்லே ஏது நேரினும் இடர்பட மாட்டோம். அண்டஞ் சிதறிஞல் அஞ்ச மாட்டோம் கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்: யார்க்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம் எங்கும் அஞ்சோம், எப்போதும் அஞ்சோம்" என்று பெருமிதத்துடன் ஓங்கி முழங்கிக் கற்டோமாக. பாரதியார், பிறிதோர் இடத்தில், # செயலிங்கு சித்த விருப்பினப் பின்பற்றும் சீர் மிகவே பயிலு நல்லன்பை இயல்பெனக் கொள்ளுதிர் பாரிலுள்ளிர்' இது, உளவியல் அடிப்படையில், உலக நன்மைக்காக மட்டுமல்லாது, தனி மனிதனின் நன்மைக்காகவும் இடப் படும் கட்டளேயாகும். எனவே, இதை ஏற்பது நல்லது: இது நம்மை வாழ்விப்பது. 'தன் பெண்டு, தன் பிள்ளை' இவர்களுக்காகவே, வரங்கேட்டு வரங்கேட்டுக் குறுகிப் போன மானிடத்தில், பாரதியார் கேட்கும் வரம், தென்றலாக மகிழ்விக்கிறது.