பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E 12 'திடங்கொண்டு வாழ்ந்தி டுவோம். தேம்பல் வேண்டா தேம்புவதில் பயனில்லே, தேம்பித் தேம்பி இ.ரும் மடிந்தவர்கள் கோடிகோடி எதற்கு,மினி அஞ்சாதீர், புவியிலுள்ளீர்' என்று பாரதியார் காட்டும் வழி, நேர்வழி; குறுகலான வழி: செங்குத்கான வழியாயினும் செம்மையான வழி. எாலலந்தாம்த்தாது, காலடியெடுத்துவைத்து அவ்வழி நடக்க முனையுமா, மக்கள் இனம்? மனித வரலாற்றில், குருதி தோய்ந்த பகுதிகள் பல. அவற்றில் சில, சமயப் போர்களின் விளைவுகள் ஆகும். பெரும்பாலானவை சமயங்களுக்கிடையே நடந்த சண்டை களே. சிலவே, சமயப் பற்றற்றவர்களோடு, நிகழ்த்திய போராட்டங்கள். சமயச் சண்டைகளின் கொடுமைக்ள், கோரங்கள்' பிற போர்களின் கொடுமைகளுக்குக் கோரங்களுக்கு குறை யாதன. சமயச் சமுக்குகளுக்கு வித்து எது? என் தெய்வம் உன் தெய்வம்' என்னும் வேற்றுமை பாராட்டல் ஆகும். அவற்றிற்கு, மனிதன் சூட்டும் வெவ்வேறு பெயர்கள். கற்பிக்கும் வகை வகையான குணங்கள், ஆகியவை, சமயப் போர்க்ளை மூட்டி விட்டன; முடுக்கிவிட்டன. சமயச் சழக் கிலே சிக்கிச் சிக்கித் திக்குமுக்காடும், மக்கள் இனத்தைப் டாாதது, ஆயிரங் தெய்வங்கள் உண்டென்று தேறி அலேயும் அறிவிலிகாள்-பல் லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வ முண் டாமெனல், கேளிாோ?"