பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II 5 இக்கட்டளை, போதிய அளவு பொதுமக்கள் காதுகளில் வீழ்ந்திருந்தால், உள்ளாரும் இல்லை; இல்லாரும் இல்லை' என்னும் பெருநிலை நோக்கி நகர்ந்து இருப்போம். தந்தையின் செல்வத்தை, தனயன் பெறுவது மரபு. பொருட் செல்வத்தை மட்டுமா பெறுகிருேம்? பதில் கடன் சுமையாக அமைந்துவிடுகிறது. முந்தையர் கருத்துச் சொத்து கடன் சொத்தாக் மாறிவிட்டதால் அவதிப்படும் மக்கள் எல்லா நாடுகளிலும் உண்டு; எல்லாக் காலங்களிலும் உண்டு. அத்தகைய கருத்து உரல்களே கழுத்தில் கட்டிக்கொண்டு மூழ்கும் நிலை, அறிவுக்கு அடையாளமாகாது. அன்பின் சுரப்பிற்கு, மக்கள் ஒருமை ஊற்றுக்குத் தடையாக இருப்பவற்றில் ஒன்று, நிற வேற்றுமை; அதன் இந்திய பதிப்பாகிய சாதி வேற்றுமை. அந்நோய்க்கு அறிவு மாத்திரை கொடுக்கிருர், பாரதியார். வீட்டுப்பூனை, குட்டிகள் போட்டது. அவை பேருக் கொரு நிறமாகும். நிற வேறுபாட்டால் ஒன்று பூனேக்குட்டியாகவும் மற்ருென்று யானைகுட்டியாகவும் வளர்ந்துவிடாது. மூன்ருவது எலியாகி விடுமா? நான்காவது புலி யாகுமா? ஆகா. எல்லாமே பூனைக்குட்டிகளே, எனவே, 'எந்த நிறமிருந்தாலும்-அவை யாவும் ஒரே தாமன்ருே? இந்த நிறம் சிறிதென்றும்-இஃது ஏற்றமென்றும் சொல்லலாமோ?"