பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II6 என்று கேட்பதில், நியாயமிருக்கிறது: நீதியிருக்கிறது. எனவே, நாமும் பாரதியாரோடு சேர்ந்து, "வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால்-அதில் மானுடர் வேற்றுமையில்லை எண்ணங்கள் செய்கைகளெல்லாம்-இங்கு யாவர்க்கும் ஒன்றெனல் காணிர்' என்று முரசு கொட்டுவோம். "கெரென்று கொட்டுமுரசே! இந்த ணிேலம் வாழ்பவ ரெல்லாம். தகரென்று கொட்டுமுரசே! பொய்மைச் சாதி வகுப்பின யெல்லாம்' என்று முரசு கொட்டியபின், அதையே வாழ்க்கை முறை யாக்கிக் கொள்வோம். நாள்தோறும் அவ்வுணர்ச்சியைசமத்துவ உணர்ச்சியை-புதுப்பித்துக் கொள்வோம். உறுதியோடு வாழ்க் கைப் பயணத்தைத் தொடர்வோம். தற்குறிகள் நிறைந்த நாட்டில், அடுத்த வேளை கஞ்சி எங்கே என்பதே தெரியாத ஏழைகள் மொய்க்கும் நாட் டில், நாம் வாழ்கிருேம், படித்த சிலரும், பதவிகளைப் பற்றிவிட்ட சிலரும், பெரும்பாலானேரின் வாட்டத்தைப் பற்றிச் சிந்திப்பதே இல்லை. இந்நிலை மாறவேண்டும். "உடன் பிறந்தவர்களேப்போல--இவ் வுலகினில் மனிதரெல்லாரும் திடங்கொண்டவர் மெலிந்தோரை-இங்கு தின்று பிழைத்திடலாமோ? என்று:பாரதியார் கேட்கிருர் இக்கேள்வி, ஆயிரம்ஆயிரம் மேடைகளில் முழங்குமா?