பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 Ho முழங்கினல், பொதுமக்களைப் பற்றிய சிந்தனை முனைக் கும். அது வளர்ந்தால், மனிதத் தன்மை தழைக்க இட முண்டு. அப்படித் தழைத்தால், எல்லோரும் வாழ, நன்முக வாழ, ஒன்ருக வாழ வாய்ப்பு உண்டு. 16 உடலை வளர்க்க உணவு. அறிவை வளர்க்க: கல்வி. உணர்வை வளர்க்க: கல்வி; கேள்வி; சான்ருேர் உறவு. எனவே எல்லோர்க்கும் உணவு கிடைக்கும் வகையில், சமுதாயத்தைச் செம்மைப்படுத்துவது நம் கடமை. எல்லோர்க்கும் கல்வி கிடைக்கும்படி செய்வதும் தலையாய கடமையாகும். இரண்டையும் வற்புறுத்துகிருர், பாரதியார். "விடுதோறும் கலையின் விளக்கத்தை"க் காணக் கட்டளையிட்டார் தேசியகவி. அதற்காக, பொற்குவை வேண்டினர்: உழைப்பினைக் கோரினர்; வாய்ச் சொல்லை விழைந்தார். விழைந்தால் என்ன? நாம் அனைவரும் கெட்டிக்காரர் களாகி நெடுங்காலம் ஆயிற்றே! மாடிமேலே மாடி கட்டவே நம் பொற்குவை: படம் பார்க்கவே காசு, புதுப்புது ஆட்களை வெட்டி வீழ்த்தவே, உழைப்பும் பேச்சும். வீட்டுக்கு வீடு தற்குறிகள்; நம் வீட்டிலும் அப்படியே "கிடக்கட்டும்’ என்று, நாமும் பாராமுகமாக முன்னேறு கிருேம்.