பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 பிடி மண்ணை வாரி இறைத்துவிட்டு, பட்டினி கிடந்து மடிவது, வாழும் வகை அல்ல. அதைப் போன்று இருக்கும் ஊட்டமற்ற, குமட்டல் கல்வியை, சிலரே மடக்கி வைத்துக்கொள்வதை மாற்ற வேண்டும், இது எல்லார்க்கும் எட்டும்படி செய்யவேண்டும். ஆகவே பாரதி ஆணையிட்டபடி, வயிற்றுக்குச் சோறிடவேண்டும்-இங்கு வாழும் மனிதருக் கெல்லாம், பயிற்றிப் பல்கல்விதங்து-இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்' 17 திருச்சோலை அழகிய சிற்றுார்: சோலையப்பt கோயிலுக்கென்று ஒர் நந்தவனம் உண்டு. அது அழகியது; நெஞ்சை அள்ளுவது; குளுமை உடையது; மனதுக்குத் தெம்பை ஊட்டுவது. அதில், மல்லிகைத் தோட்டம் தனியானது. அதற்குள், காலையில் உலாவினன், உலகப்பன். பசுமை செறிந்த செடிகள்; அவற்றில் இங்கும் அங்கும் வெண்மை தலை நீட்டியது. பசுமையின் நடுவில் வெண்மை புன்னகை புரிந்தது. உலகப்பனின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. எனவே, மாலைப் பொழுதும் மல்லிகைத் தோட்டத் திற்குச் சென்ருன். அதை நெருங்குகையிலேயே, ஏதோ