பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 ஒன்று புதிதாகத் தோன்றிற்று: உவகை ஊட்டியது. ஓகோ நறுமணம் வீசுகிறது என்பதை உணர்ந்தான். இயற்கையின் மணமும் உணர்வில் தெளிவும் சேர்ந்து உலகப்பனின் நடையை முடுக்கிற்று. விரைந்து தோட்டத் துள் நுழைந்தான். காற்றெலாம் நறுமணம்? கண்ட இடம் எல்லாம் வெள்ளைப் பூக்கள் மலர்ந்து சிரித்து வரவேற்றன. ஆம், மல்லிகை காலேயில் அரும்புகளாக இருந்தது; பக லெல்லாம் போதாகி; மாலைமலர்ந்தது; மலர்ச்சி கண்ணையும் கருத்தையும் கொள்ளை கொண்டது. அதோடு நின்றதா? இல்லை நறுமணத்தை வழங்கியது. விளம்பரம் விரும்பாத வள்ளலைப்போல், நறுமணத்தை காற்ருேடு கலந்துவிட்டது. மலர்ந்த மல்லிகை தந்தது வாசனை மணம். வாழ்க்கையிலும் மணம் உண்டு. எப்போது? மலரும் போது. மல்லிகை அரும்பாக இருந்தபோது வழங்காத மணத்தை, மலரானபோது வழங்கியது. பிற அரும்புகளும் மலராகும்போதே மணம் பரப்பும். இயற்கை கற்பிக்கும் இந்தப் பாடத்தை பண்டைத் தமிழர்கள் நன்கு கற்று இருந்தார்கள். அவர்கள் இயற்கை யிலிருந்து நெடுந்துாரம் விலகி இருந்து வாழாதவர்கள். எனவே, மலர்ந்த பிறகே பெறும் மணம் என்னும் சொல்லால், காளேயும் கன்னியும் வாழ்க்கைத் துணை யாவதைக் குறிப்பிட்டார்கள். பச்சைக் குழந்தைகளைக் கணவன் மனைவியராக்கும் பழக்கம் பிற்காலப் பழக்கம்