பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 I அது நின் காதலியா? நீங்கள் இருவரும் ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகளா? ஞாயிற்றை நாள்தோறும் காண்கிருேம். பாரதி யாரைப் போல் கேட்க, நமக்கெல்லாம் தோன்றிற்ரு? தீயே, நீ எமது உயிரின் தோழன். உன்னை வாழ்த்துகின்ருேம். நின்னப் போல, எமதுயிர், நூருண்டு வெம்மையும் சுடரும் தருக! தீயே, நின்னைப் போல, எமதுள்ளம் சுடர்விடுக! தீயே, நின்னைப்போல, எமதறிவு கனலுக! என்று பாரதியார் வேண்டுகிருர். வழிவழி வந்த வேண்டுதலே; கருத்திலே தொன்மை கொண்ட இது, நடையிலே புதுமை கொண்டுள்ளது. s 'மழை பாடுகின்றது. - அது பலகோடி தந்திகளுடையதோர் இசைக்கருவி' என்று பாரதியார் வருணிப்பது, நயமுடைய படப்பிடிப் பாகும். மழை நமக்குப் புதிதல்ல. இடியின் குமுறலும் மின்னலில் வெட்டும், நமக்குப் பழகிப்போனவை. ஆயினும் அச்சமூட்டுவன. அந்த மின்னல் வெட்டுகளை, பாரதியார் எப்படிக் காண்கிருர்? மேகக் குழந்கைகள் மின்னற் பூச் சொரிகின்றன’ இப்படிக் காட்சியளிக்கின்றன பாரதியாருக்கு. பாரதியார் விழைவது போல,