பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I.33 என்று பாரதியார் கூறுவதை நினைவில் கொள்ளுதல் நல்லது. இது நம் ஆழ்ந்த சிந்தனைக்குரியது. கணந்தோறும் கணந்தோறும் காற்று, நம்முள் சென்று வருகிறது. அதன் இயல்பென்ன? காற்று. மெலிய தீயை அவித்துவிடுவான். வலிய தீயை வளர்ப்பான். இது தெரிந்த உண்மை. இதிலிருந்து உணர வேண்டியது அவன் தோழமை நன்றி என்பதை, தோழ மைக்கு வழி சொல்லுகிருர் பாரதியார். இதோ பாரதி காட்டும் வழி: ..................மானிடரே வாருங்கள் வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம் கதவுகளை வலிமையுறச் சேர்ப்போம் உடலை உறுதிகொள்ளப் பழகுவோம். உயிரை வலிமையுற நிறுத்துவோம் உள்ளத்தை உறுதி செய்வோம் இங்ங்ணம் செய்தால், காற்று நமக்குத் தோழனகி விடுவான். இந்நிலை யெய்த தனித்தனி முயற்சி அவ்வளவு பலன் கொடுக்காது. சமுதாயத்தின் கூட்டு முயற்சியே ஆதாய மாகும். பிள்ளைகளுக்கு அதிகப்படியான செல்லம் கொடுத்து விடுவதுண்டு. அப்பிள்ளைகள் அனிச்ச மலர்களாக மாறிவிடுவார்கள்: வாழ்க்கைப் போராட்டங்களைத் தாக்குப்பிடிக்க இயலாதவர்க ளாகிவிடுவார்கள். தமிழர்களாகிய நம்மில் அதிகம் பேர், இப்படிச் செல்லங் கொடுத்துப் பாழாக்கப்பட்டவர்களோ என்று எண்ண இடமுண்டு. நம்மளவு தொட்டாச் சுருங்கிகள் பிற மொழியாளர் களிடையே உண்டா என்பது கேள்விக்குறி.