பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1,74 கண்டிக்க வேண்டியபோது, கண்டிக்கத் தவருத பாரதியாரின் குற்றச் சாட்டைக் கேட்போம். தமிழ் மக்கள் எருமைகளைப்போல எப்போதும் ஈரத் திலேயே நிற்கிருர்கள். ஈரத்திலேயே உட்காருகிருர்கள்: ஈரத்திலேயே நடக்கிருர்கள்: ஈரத்திலேயே படுக்கிருர்கள். ஈரத்திலேயே சமையல்: ஈரத்திலேயே உணவு. உலர்ந்த தமிழன் மருந்துக்குக்கூட அகப்பட மாட்டான். s ஒயாமல் குளிர்ந்த காற்று வீசுகிறது. தமிழ் மக்களிலே பலருக்கு ஜூரம் உண்டாகிறது. நாள்தோறும் சிலர் இறந்து போகிருர்கள். மிஞ்சி யிருக்கும் மூடர், 'விதிவகம் என்கிருர்கள். ஆமாடா, விதிவசந்தான். அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை' என்பது ஈசனுடைய விதி. சாஸ்திரமில்லாத தேசத்திலே நோய்கள் விளைவது விதி' என்கிரு.ர். இதைப் படித்ததும், 'நம் பழம்பெரும் பாரதத்திலே சாஸ்திரங்கள் இல்லையா? என்று வெகுளாதீர்கள். பாரதியார் இதுபற்றிக் கூறும் விளக்கத்தைத் தொடர்ந்து படியுங்கள். தமிழ் நாட்டிலே சாஸ்திரங்களில்லை. உண்மையான சாஸ்திரங்களே வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்து விட்டுத் தமிழ்நாட்டுப் பார்ப்பார் பொய்க்கதைகளை மூடரிடங் காட்டி வயிறு பிழைத்து வருகிருர்கள். குளிர்ந்த காற்றையா விஷமென்று நினைக்கிருய்?