பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 35 ஊர்க்காற்றை மனிதர் பகைவனுக்கி விடுகின்றனர். அதனுல் காற்றுத்தேவன் சினமெய்தி அவர்களை அழிக்கிருன். அவன் வரும் வழியில் சேறு தங்கலாகாது. நாற்றம் இருக்கலாகாது. அழுகின பண்டங்கள் போடலாகாது. புழுதி படிந்திருக்கலாகாது. எவ்விதமான அசுத்தழும் கூடாது. அவன் வரும் வழியை நன்முகத் துடைத்து நல்ல நீ! தெளித்து வைத்திடுவோம். - அவன் வரும் வழியிலே, கர்ப்பூரம் முதலிய நறும் பொருள்களைக் கொளுத்தி வைப்போம். அவன் நல்ல மருந்தாக வருக! அவன் நமக்கு உயிராக வருக! அமுதமாகி வருக! -என்கிருர் பாரதியார். கோயில் சுற்றுப்புறங்க்ளில் அசுத்தம் செய்யாதிருக்கவே இனித்தான் கற்றுக்கொடுக்கவேண்டும். கல்விக்கூடங்களாவது வாழ்க்கைக்கு வேண்டிய துப்புரவான பழக்கங்களைக் கற்றுக்கொடுக்க முடிகிறதா? பாடச் சருகுகளே ஏற்றுவதும் இறக்குவதுமே அவற் றின் வேலைகளாகி நின்றுவிடுகின்றன. என்றைக்கு நச்சுக் காற்றிலிருந்து விடுதலையோ? 1916இலேயே அண்ணல் காந்தியடிகள், "கங்கை நதிக்கரைகளின் மேல் அசுத்தம் செய்யும் இளைஞர்கள் எத்தனைப் பட்டங்கள் பெற்றும் பயனென்ன?" என்று குமுறினர்