பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f37 அறுபதாண்டுகளுக்குப் பின், நிலைமை மேலும் மோச மாகியுள்ளது. மக்களுக்கும் தெரியாது: பெரியவர்கள் சொன்னதும் நெஞ்சில் பதியாது. புதிய சமுதாயத்தின் நாற்றங்கால் களாகிய கல்வி நிலையங்களும் திருத்தியனுப்பா. அப்புறம்: நாம் எருமை மாடுகளாகத் தொடர வேண்டியதுதானே! 19 பாயசத்தில் நாட்டஞ் செலுத்தியவன், எதிரில் குவித்திருக்கும் வெண்சோற்றை மறந்துவிடுவதுண்டு. அதுபோல, பாரதியின் பாடல்களில் சொக்கியுள்ள நாம், அவருடைய உரைக்குவியலை மறந்துவிடுகிருேம். பாரதியார் உரை நடையில் எழுதியுள்ளவையும் நிறைய. அவை சத்தான உணவுக்கு ஒப்பானவை. பழகு தமிழில் பற்பலவற்றைப் பற்றி பாரதியார் எழுதினர். அவருடைய உரை நடையில் உயிர் துள்ளுகிறது. அது ஊருக்கு நல்லதைச் சொல்லுகிறது. விளைபொருள்கள் பல. அத்தனையும் அப்படியே பயன்படுத்தலாமா? ஆகாது. ஒவ்வோர் வேளை ஒன்றையோ, சிலவற்றையோ கையாள லாம். அப்படிப் பயன்படுத்துகையில், சிலவற்றைப் பச்சை யாக, சிலவற்றை அவித்து உண்கிருேம். பாரதியாரின் வெவ்வேறு கட்டுரைகளே. வெவ்வேறு நிலைகளில், வெவ் வேறு பக்குவத்தில் மக்கள் உண்ணவேண்டும். அவை நம் அறிவில் செறிந்தால், வாழ்க்கை ஒட்டத்தில் புதிய தெம்பும் ஒளியும் விளங்கும். ليسس.rrنا