பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Z.38 பாரதியார், காசியில் சில காலம் தங்க நேர்ந்தது, அப்போது, இந்து பல்கலைக்கழகத்திற்கு அடிப்படைக் கல் நாட்டப்பட்டது, வரலாற்றுச் சிறப்புடைய அப்பெரு விழா வில் அறிஞர் சிலர் உரையாற்றினர். அவர்களில் ஜகதிச சந்திரவசு என்னும் உயிரியல் அறிஞர் ஒருவர். வேத ரிஷிகளின் கவிதை' என்னும் தலைப்பில், வசுவினுடைய உரையைப் பற்றி எழுதுகிருர் பாரதியசார். நவீன சாஸ்திர பண்டிதர்களின் சிகாமணியாக விளங்கும் வசு என்று, பாரதியார் அவரைப் பற்றி குறிப்பது சாலப் பொருத்தம். உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியாக விளங்கி யவர் வ.சு. லெளகீக சாஸ்திர ஆராய்ச்சிகளிலே மறுபடியும் பாரத தேசம் தலைமை வகிக்கும்படி செய்வது நம்முடைய கடமை என்று கோடிட்டுக் காட்டினர். அதைப் பாரதியின் கட்டுரை வழியாக, நாம், அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்ளுதல் நல்லது. வசுவின் உரையைக் கருப் பொருளாகக்கொண்டு எழுதும் பாரதியார், 'நம்முடைய இடைக்காலத்து மடமை களை எல்லாம் மகிமைகள் என்று நினைத்து வீண் பெருமை கொள்வோரின் பேச்சை நாம் உதறிவிடுதல் நியாயம். ஆனால், வசு பண்டிதர் கூறியதை நாம் மதிப்புடன் ஏற்றுக் கொள்ளுதல் தகும். இடைக்காலத்திலே நமது சாதி, பொய் களும் சோர்வுகளும் குவித்த குப்பையின் கீழே அழுந்திக் கிடந்தது. பாரதமாதா நித்திரையில் இருந்தாள். இப்போது மறுபடியும் அந்தக் குப்பையிலிருந்து வெளிப் பட்டு, தைரியமென்னும் கங்கா நதியில் ஸ்நானம் செய்து விட்டு, நமது பாரத ஜாதி வானத்திலே தோன்றும் சூர்யோதயத்தை அன்புடன் அழைத்து வாழ்த்துக் கூறுகின்றது. என்கிருர். எவ்வளவு நம்பிக்கையூட்டும் எழுத்து!