பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 கா.இலக் கதிரவனின் போரொளியைக் காணக்கூசும் நாம், முப்பதாண்டு தன்ட்ைசிக்குப் பிறகும், இந்தியர் களாக மாறுமல், பற்பல சாதியினராக இருந்து கொண்டு. சாதிப்போர்கள் என்னும் புகை மண்டலத்தை நாள் தோறும் எழுப்பிக் கொண்டிருப்பது சரியா? 1.வெறும் சொல்லுக்கு மகிமையில்லை. அச்சொல் உள்ளத்துணிவை உணர்த்துமாயின், அதற்கு மகிமை யுண்டு. எதனை நினைக்கிருயோ அதுவேயாகிருய் என்பது தவருத உண்மை. நினைப்பு நிஜ நினைப்பாக இருக்க வேண்டும். ஆழ்ந்த நினைப்பு, அசையாத நினைப்பு, வலிய நி2ணப்பு, மாருத நினைப்பு-அத்தகைய நினைப்பு, விரைவில் உலகமறியத்தக்க வெளியுண்மையாக மாறிவிடும்" என்று பாரதியார் கூறுவது வெற்றுரையல்ல; உண்மையான உயிருள்ள உரை. முகப்பூச்சாக இருப்பதைத் துடைத்து விடுவீர்: உள்ளத்தின் வாதாளத்தில் இருந்து ஒலிப்பீர் . நாம் அனைவரும் இந்திய சாதி; நாம் அனைவரும் சமத்துவ சாதி; நம்மில் மேலும் இல்லை; கீழும் இல்லை! கழிந்து கொண்டிருக்கும் எங்கள் தலைமுறை எப்படி நடந்தாலும், நீங்களாவது உண்மையான இந்தியர்களாக உறுதியாக நின்றுவிட்டால், உலகியல் வளர்ச்சி மளமளவென்று நம்மை அணைத் துக்கொள்ளும். உலகியல் வளர்ச்சி தேவையா? இவ்வுலகம் பொய் யல்லவா? இக் கானல் நீரைத் துரத்திக்கொண்டிருக்க வேண்டுமா? பல்லைக் கடித்துக்கொண்டு எப்படியோ இருப் போம்; இம்மையைச் சீராக்குவதைப்பற்றிக் கவலையேன்? மறுமைக்கு நல்ல இடத்தைத் தேடிக்கொள்வதில் முனே வோம்; இத்தகைய கருத்துகள் பழையன. அடிக்கடி நம் செவிகளில் வீழ்வன பொது மக்களைக் குழப்புவன.