பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 தலைமுறை தலைமுறையாகக் குழம்பி வரும் இக்கருத்து களே. பாரதியார், நன்முக அறிவார். எனவே, பாரதியாரின் தராசு எடைபோட்டுக் காட்டுவதைக் கவனிப்போம்: "உலகம் பொய்; அது மாயை, அது பந்தம்; அது துன்பம்; அது விபத்து; அதைவிட்டுத் தீரவேண்டும். இந்த வார்த்தைதான் எங்கே பார்த்தாலும் அடிபடுகிறது. ஒரு தேசத்தில் படித்தவர்கள் அறிவுடையோர் சாஸ்திரக் காரர் எல்லோரும் ஒரே மொத்தமாக இப்படிக் கூச்சலிட் -ால், அங்கே லெளகீக காரியங்கள் வளர்ந்தேறுமா? மனம் போல வாழ்க்கையன்ருே!

பூர்வமதாசார்யர், பரமார்த்திகமாகச் சொல்லிப் போன வார் த்தைகளை, நாம் ஓயாமல் லெளகிக த்திலே சொல்லிக்கொண்டிருப்பது சரியா? வெகுஜன வாக்கு நமது தேசத்தில் பலித்துப்போய்விடாதோ? இகலோகம் துன்ப மென்று நம்பினல், அது துன்பமாகத்தான் முடியும்.

"இந்த உலகம், இதிலுள்ள தொழில், வியாபரம், படிப்பு, கேள்வி, வீடு, மனைவி, மக்கள், எல்லாவற்றிலும் ஈசன் அளவிறந்த இன்பத்தைக் கொட்டி வைத்திருக் கிருன்' என்று பாரதியார் கூறுவதை ஒதுக்காமல், "நாம் இகலோகத்து அறிவிலும் மேம்பாடு பெற வேண்டும். தெரியாத சாஸ்திரங்களின் ஆரம்பங்களைப் பிறரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பிறகு அவற்றை நமது ஊக்கத்தாலும் உயர்மதியாலும் மேன் மேலும் வளர்த்து மீளவும் உலகத்தோடு ஊட்ட வேண்டும். நெல் விதை முளைத்தல் மட்டும் போதாது. உயர்ந்து வளர்தல் மட்டும் போதாது, விளைய வேண்டும். பல பத்து மணிகளுடைய கதிராக விளைய வேண்டும். விளைந்த நெல் மக்களுக்கு உணவாக வேண்டும். இதுவே இயற்கை நெறி.