பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 முடிமுதல் கால்வரை ஒடும் பகுதிகளுக்கெல்லாம் உரியவை. பேராறுகளோ நாடு முழுவதற்குமே உரியன. வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் , ம்ைபத்து நாடுகளிலும் பயிர்செய்குவோம்’ என்று, உரிமைக்கவி, நமக்கு உரியனவற்றைச் சுட்டிக் காட்டினர். காஷ்மீரும் கங்கையும் நம் அனைவருக்கும் உடைமை. "இதோ வெண்ணெய்; இனி நெய்க்கு அழாதே" என்பது போலத் தெளிவாகக் காட்டிவிட்டு, 'இன்னல்கள் உற்றிடும் போததற் கஞ்சோம் ஏழையராகி இனி மண்ணில் துஞ்சோம்' என்று நமக்காக, பாரதியார் கம்பீரமாக்ச் சூளுரைத்தார். பழமையும் வளமும் செறிந்த பாரதத்தின் மக்களாகிய நாம் எப்படி இருந்தோம்? பாரதியின் படப்பிடிப்பைப் பார்ப்போம். 'எண்ணிலா நோயுடையார்-இவர் எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்; கண்ணிலாக் குழந்தைகள்போல்-பிறர் காட்டிய வழியிற்சென்று மாட்டிக்கொள்வார்; ................................இவர் பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்? இந்தப் படப்பிடிப்பு கோணுத படம். ஏன் இத்தகைய சோக நிலையை அடைந்தோம்? பாரதியார் சுட்டிக் காட்டட்டும்: நெஞ்சு பொறுக்குதிலையே-இந்த நிலைகெட்ட மனிதரை கினைந்துவிட்டால்