பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 அஞ்சியஞ்சிச் சாவார்-இவர் அஞ்சாத பொருளில்லே அவனியிலே, வஞ்சனைப் பேய்களென்பார்-இந்த, மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார்' துஞ்சுது முகட்டில் என்பார்-மிகத் துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்' இந்த அவலம் இன்றும் தொடரவில்லையா? கற்பனைப் பிசாசுக்கே நடுங்கியவர்கள் யார் யாரையோ கண்டு நடுங்கினர்கள். அவ்வாறு நடுங்கிய நம்மை, "சிப்பாயைக் கண்டு அஞ்சுவார்-ஊர்ச் சேவகன் வருதல்கண்டு மனம் பதைப்பார் துப்பாக்கி கொண்டொருவன்-வெகு தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார் அப்பால் எவனுே செல்வான்-அவன் ஆடையைக் கண்டு பயக்தெழுந்த நிற்பார் எப்போதும் கைகட்டுவார்-இவர் யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கி நடப்பார்’ என்று பாரதி இடித்தார். இந்த அவலநிலை, தொடை நடுங்கி நிலை, இன்றும், எத்தனை ஊர்களில் தன்னுட்சி செலுத்துகிறது! பூனைகளாகிய நமக்குள் ஒற்றுமையாவது உண்டா? இல்லை. நாம் நெல்லிக்காய் மூட்டைகள். அன்றும் அப்படித் தான்; இன்றும் அப்படித்தான். கொஞ்சமோ பிரிவினைகள்?-ஒரு கோடி என்ருல் அது பெரிதாமோ? இத்தனை பிளவுகளும் எப்படி ஏற்பட்டன? கொள்கை அடிப்படையிலா? இல்லை, வெறும் கற்பனைப் போட்டியால் விளைந்தன.