பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

灵尘与 இதை ஏற்கவேண்டாமா? 'தன்னைத்தான் ஆள வேண்டும் தன்னைத்தான் அறிய வேண்டும் தன்னைத்தான் காக்க வேண்டும் தன்னைத்தான் உயர்த்த வேண்டும்: பாரதியாரின் தராசு', வேணு முதலியார் வழியாக' அறிவு கொளுத்துகிறது. இந்த அறிவை நாம் பெற்றிருந்தால், பிற நாட்டு உதவிக்குக் கையேந்தி நிற்பதே நம் வாழ்க்கை முறை என்னும் நிலை உருவாகியிராது. நம் காலில் நின்று, நம் முயற்சியால் உருவாக்கி, நம் முதலீட்டால் வளர்த்து, நாம் வாழ்ந்திருப்போம். எல்லோரையும் வாழ வைத்திருப் போம். "நல்ல விளக்கிருந்தாலும் கண்வேண்டும் பெண்ணே நாலு துணையிருந்தாலும் சுயபுத்தி வேண்டும் வல்லவர்க்கு மித்திரர்கள் பலருண்டு, பெண்ணே வலிமையிலார் தமக்குலகில் துணையேது, பெண்ணே' என்று, வேணு முதலியாரைப் பாட வைக்கிருர் பாரதி யார். இந்த டானிக்" நமக்குத் தேவை. உடனடியாகத் தேவை. அந்தரடிச்சான் சாஹிப் கதை கற்பனையேயானலும். அப்போது காணும் காட்சியே, எந்த வித்தைக்காகவோ எந்த வேலையோ பொத்தென்று மடியில் வீழ்வது பொய் யல்ல; நடைமுறைக் கேலி. "சாஸ்திரியார் மகன்' என்னும் பதினன்கு வரிக் கதை யின் வழியாக, பாரதியார் யாரையும் புண்படுத்த முடிய வில்லை. கசப்பான உண்மையொன்றைக் கிண்டலோடு காட்டு கிருர். சாஸ்திரியாரின் நிலைக்கு தங்களைத் தள்ளிக் கொண்டவர்கள், இக்காலத்தில் பலராவர்.