பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 அமெரிக்காவுக்குப் போன சீன ராஜகுமாரன் நல்ல நகைச்சுவைத் துணுக்கு ஆகும். பிராமணப்பிள்ளை நாலு சாஸ்திரம் படித்த கதை"யும் நல்ல பாடத்தை நயம்படக் கற்பிக்கிறது. காலத்தின் கோலத்தால் வெற்றிபெற்று அதையே முதலாக்கி வாழ் வோர்-துணிப்புல் திறமைசாலிகள்-எல்லாத் துறைகளி லும் காட்சியளிக்கிரு.ர்கள். பாரதியாரின் கவிதைகளைக் கற்பதைப்போன்று, அவருடைய கட்டுரைகளையும் கதைகளையும் படித்தல் பயன் உள்ள செயலாகும். அவருடைய உரைநடை, வெறும் சொற்கோவையல்ல. பொருள் நிறைந்த எழுத்து கள். உயிர் மின்னும் எழுத்துகள்: தெளிவூட்டும் சொற்கள். மறைமலையடிகளாருக்குப் பிந்திய தமிழல்ல பாரதி யாரின் உரைநடை. ஆயினும், அது "தமிழா' என்று மலைக் கும் அளவிற்கு மணிப்பிரவாள நடையும்ஸ்ல. எளிய அக் கால மக்கள் மொழியில் பல விஷயங்களைப் பற்றி பாரதி யார் எழுதியுள்ளார். அவற்றின் தொகுப்பிற்கு 8-3-36ல் முன்னுரை தந்த சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார்: 'பாரதியார் எடுத்த விஷயங்கள் மிக்ப் பெரியவை. விஷயங்களின் கவுரவம் ஒரு புறமிருக்க, தற்காலத்தில் தமிழ் வாசக நடை எவ்வாறிருக்க வேண்டுமென்பதை, பாரதி யார் எழுதிய இச்சிறு புஸ்தகத்தில் கண்டு கற்கலாம். அர்த்த புஷ்டியில்லாத அரற்றலின்றி, சொன்னதையே சொல்லி பக்கங்கள் நிறைப்பதுமின்றி, ஸ்படிகம் போன்ற தெளிவும், வைரம் போன்ற உறுதியும் பெற்று, இலக்கணப் பிழைகள் ஒழிந்த பேச்சுத் தமிழையே எவ்வாறு, ஆழ்ந்த கருத்துக்களே எழுதவும் சித்திரிக்கவும் உபயோகப்படுத்த