பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 இரா. எனவே, அன்னியர்களே இந்த நாட்டை ஆண்டு விட்டுப் போகட்டும்' என்று, தியதாயினும் உள்ளது போற்றும் மக்களும் நிறைந்திருந்த காலத்தில், பாரதியார் புாடினர். அவர்களுக்குப் பதில் சொல்லுவதுபோல் பாடினர். 'உரிமையில்லாத நாட்டில் வாழும் மக்கள் வாழ்க்கை வாழ்க்கையாகாது. அடிமை மக்கள் நடமாடும் பிணங்கள். அவர்களிலே சிலர் அலங்கரிக்கப்பட்ட பினங்கள். அவர் கள் நிலை, அதற்குமேல் உயர்ந்ததல்ல என்று பாடினர். அதைப் படிப்போம்: நின்னருள் பெற்றிலாதார் கிகளிலாச் செல்வரேனும் பன்னருங் கல்விகேள்வி படைத்துயர்ந் திட்டாரேனும் பின்னரும் எண்ணிலாத பெருமையிற் சிறந்தாரேனும் அன்னவர் வாழ்க்கை பாழாம் அணிகள் வேய் பிணத் தோடொப்பர் அவ்வளவுதான? ஞாயிற்றின் ஒளி படாதபோது பயிர் பச்சைகள் பட்டுப்போகும். அதே போன்று விடுதலை ஒளி வீசாத நாட்டில், ஆவியங் குண்டோ? செம்மை அறிவுண்டோ? ஆக்கமுண்டோ? காவிய நூல்கள் ஞானக் கலைகள் வேதங்கள் உண்டோ?" என்று பாரதிகேட்டார். பதில் என்ன? இல்லை இல்லை; இல்லை. இல்லவே இல்லை' என்பதே, எல்லா அடிமைச் சமுதாயங்களின் பதிலும் ஆகும். "அன்னிய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டின் மக்கள், எத்தகைய துன்பங்களை அனுபவிப்பார்கள்’ என்பதைப்