பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ኃ0 மண்ணி லின்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின் மாண்பினை இழப்பாரோ? கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கிளுல் கைகொட்டிச் சிரியாரோ? என்று கேட்கும்போது மனித இரத்தம் ஒடும் எவ னும், 'வந்தே மாதரம் என்போம்; எங்கள் மாநிலத் தாயை வணங்குதல் என்போம் என்று தானே முழங்குவான்? பாரதத் தாய், மலைகளும் ஆறுகளும் மட்டுமா? விண்ண வண்ண மண்வகைகள் மட்டுமா? அடர்ந்த காடுகளும் செழித்த கழனிகளும் மட்டுமா? தாயின் மடியில் வளரும் மக்களும் சேர்ந்ததே இந்தியா? நம் மாநிலத் தாயை வணங்கும் நாட்டுப் பற்ருர் களைப் பார்த்து, ஜாதி மதங்களைப் பாரோம்-உயர் ஜன்மம் இத்தேயத்தில் எய்தினராயின் வேதிய ராயினும் ஒன்றே-அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே-நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல் வேண்டும்-இந்த ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? என்று, கம்பீரமாக உயர்ந்து நின்று ஓங்கிக் குரல் கொடுக்கிரு.ர். பங்குச் சண்டை, ஒன்றுபட வொட்டாமல் குறுக்கிடு வதைப் பாரதி அறிவார். கrதந்திர இந்தியா எப்படியிருக் கும் என்று தெளிவுபடுத்துகிரு.ர். இதோ பாரதி விரும்பிய புதிய பாரதம்;