பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. படித்தவர்கள் அனைவரும் அறிஞர்கள் ஆவதில்லை. தியாகிகள் அனைவரும் திறமை சாலிகள் ஆகிவிடுவதில்லை. போராட்டத் திறமை ஆட்சித் திறமைக்கு உத்திரவாத மல்ல. எனவே, இந்திய விடுதலைக்குப் போராடிய இலட்சக் கணக்க்ாணவர்களில் சிலரே, விளைவுகளைப்பற்றிய தெளிந்த சிந்தனை உடையவர்களாக இருந்தார்கள். அவர்களில் ஒருவர் பாரதியார். அரசியல் விடுதலை எதற்காக என்று பாரதியார் கோடிட்டுக் காட்டுவதைக் காண்போம். == "வருத்தம் அழிய வறுமை ஒழிய வைய முழுதும் வண்மை பொழிய வேண்டுமம்மா விடுதலை" என்று விடுதலையின் பயனை விளக்கிப் பாடினர். அரசியல் விடுதலை, அதற்கே இயற்கையான பெருமை உடையது. அதை மறுக்க முடியாது; மறக்கவும் கூடாது. யானைக்கு உரியவராக இருப்பது, பெருமைக்குரியதே. அதோடு நிற்பது சரியா? ஆற்றல்மிக்க யானையைப் பழக்கி, பெரும் பெரும் மரங்களைத் தூக்க வைத்து வேலை வாங்கவேண்டும். அரசியல் விடுதலை, ஆற்றல்மிக்க நிலை. கோடி யானை களின் வலிமையை இணைத்துள்ள நிலை. அதை அடக்கி யாண்டு ஒழுங்குபடுத்தி, பற்பல நல்ல வேலைகளுக்குப் பயன் படுத்தவேண்டும். அடக்கி ஒழுங்குபடுத்தாவிட்டால், ஒரே பெருமர்த்தை நான்கு யானைகள் நான்கு பக்கம் இழுக்க, மரம் முறிந்து, நான்கு துண்டுகளாகி, வீளுகும். அதோடும் நிற்காது. சிலவேளே யானைகளுக்குள் சண்டை மூண்டு அமர்க்களமாகலாம். அத்தகைய நிலை