பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 எல்லார்க்கும் பொதுவான புதிய இந்தியாவில், "எல்லோரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் ஓர்கிறை எல்லாரும் ஓர்விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர்-நாம் எல்லாரும் இக்காட்டு மன்னர்-ஆம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்." எனவே, வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே." சமத்துவம், சமதர்மம் இன்னும் பேச்சுப் பொருள் களாக மட்டும் நீடிப்பது சரியல்ல. இவை நடைமுறை வாழ்க்கையாக மாறவேண்டும். விரைந்து மாறவேண்டும். இந்த மாற்றம், மக்களின் பொறுப்பு: மக்களுக்கு, இந்த இலட்சியத்தைத் தெளிவாகக் காட்டி, உணர்வூட்டி, அவர்களைச் செயல்பட வைக்கும் கடமை, கற்ருேர்களுக்கு உடையது. 3 சமத்துவம், சமதர்மம் என்னும் சொற்கள் நமக்குப் புதியன அல்ல. இந்திய விடுதலைப் போராட்டக் காலத் திலேயே அறிமுகமான சொற்கள் இவை. மேடைதோறும் இச்சொற்கள் முழங்கின. முற்போக்கு எழுத்தாளர்கள், இச்சொற்களே மீண்டும் மீண்டும் பயன்படுத்தினர்கள். பொருளறிந்தே பயன்படுத் தினர்கள்.