பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 எல்லோர்க்கும் உணவு இருக்காது என்னும் அச்சமே, மேற்கூறிய முனைப்பிற்கும், போட்டிக்கும், தனக்கு என்னும் தன்னலப் பாகுப்பாட்டிற்கும் வேராகும். எனவே, நம்மைப் பார்த்து, தெரிந்த உண்மையை முரசு கொட்டித் தெளிவு படுத்துகிரு.ர். 'வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர்-இங்கு வாழும் மனிதரெல்லாரும்: பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்-பிறர் பங்கைத் திருடுதல் வேண்டாம்' மகாகவி பாரதியார், கற்பனையாக, மிகைப்படச் சொல்லுவதல்ல மேற்படி கருத்து; இது உண்மையே! வளம் பல இருந்தும், விளைவு பல கனிந்தும், நம்மிலே பலர், பஞ்சத்தில் சிக்கித் தவிப்பது, தவருண வாழ்க்கை முறையின் தீய விளைவாகும். கீழ், மேல் படிகள், இக்கால வேளாண்மைக்கோ, தொழில்களுக்கோ தேவையில்லே. ஆகவே, சாதி அமைப் பைப் போற்றிக் காக்கத் தேவை இல்லை. இக் கருத்தை அறிவு அடிப்படையில் ஏற்றுக்கொண் டுள்ள முதியவர்களோ ஏராளம். ஆனால், சாதிகளின் ஒருமைப்பாட்டு முயற்சியோ, வைக்கோர்ப்போரில் ஊசி தேடும் வேலையாகவே இருக்கிறது. புதிய கருத்துக்கள் பெரியவர்களிடம் புகுந்து வேலை செய்து பலன் கொடுப்பதைவிட அதிக பலன. சிறுவர் களிடமும் இளைஞர்களிடமும் கலந்துவிடும்போது கொடுக் கும். இந்த வாழ்வியலை அறிந்த பாரதியார், பாப்பாவைப் பிடிக்கிரு.ர். வளரும் பாப்பாவிற்கு, வாழும் முறையின் பல கோடு களையும் எடுத்துக்காட்டுகிரு.ர். எளிய சொற்களால், புரியும்