பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 சிந்தித்தார்கள். வாழ்க்கையின் பல்வேறு கூறுகளைப் பற்றிச் சிந்தித்தார்கள். வெவ்வேறு கோணங்களில் இருந்து சிந்தித்தார்கள். கணவனுடைய சிந்தனைகள் அத்தனைக்கும் தலையாட் டும் மனைவியாக நம் தாய்க்குலம் முற்காலத்தில் இல்லை. வாழ்க்கைத் துணைவியின் கருத்துக்கெல்லாம் தை யசைக்கும், பூம் பூம் மாடாக நம் தந்தையர்கள் இல்லே. அன்பு இல்லறம் நடத்தியபோது சிந்தனைப் போட்டி இருந்தது; அது மதித்துப் போற்றப்பட்டது. எனவே, ஆயிரம் எண்ணங்கள் வளர்ந்தன; வள மூட்டின; வாழ்வளித்தன. நீண்ட வாழைக்குலையில், அடுக்கடுக்காக அமைந்து அழைக்கும் பழங்களைப்போல, நம் குடும்பங்கள் விளங்கின. இதை உணர்ந்த பாரதியா?, 'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலா வி. இருந்ததும் இங்காடே-அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இக்காடே-அவர் சிங்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே' என்று பாடி, நமக்கும் நாட்டுப்பற்றை ஊட்டுகிரு.ே இத்தகைய சிறந்த நாட்டை, 'வந்தனைகூறி மனத்தில் இருத்தினன் வாயுற வாழ்த்தேனே-இதை வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று வணங்கேனே