பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 அவ்வளவு ஆழமாக மிக ஆழமாகத் தொன்மையில் புதைந்து உள்ளது. இவ்வளவு மூத்தவள் என்று கூறமுடியாத அளவு வயதேறிய நம் தாய், தள்ளாமையில் தடுமாறுகிருளா? இல்லை. - இளமையோடு வாழ்கிருள் நம் பாரதத் தாய். அப்படியா? என்று மலைக்க வேண்டாம். இளமையின் அடையாளம் என்ன? புத்தம் புதிய சிந்தனைகள் ஊறுவது இளமைத் துடிப் பின் அடையாளம். நல்ல புதிய சிந்தனைகளைப் பிறரிடமிருந்து ஏற்றுக் கொள்ளுவது அறிவின் இளமைக்கு அடையாளம். இவ்வடையாளங்களைக் கண்டார், பாரதியார். நாம், எங்கிருந்தோ ஒண்ட வந்தவர்கள் அல்லர். நம் தந்தையும் தாயும் இனிய இல்லறம் நடத்தி மகிழ்ந் திருந்தது இப்பொன்னட்டில். அவர்கள் மட்டுமா? அவர்கள் மூதாதையரும் வாழ்வாங்கு வாழ்ந்தது நம் பாரதத்தில்தான், முன்னேர் வாழ்ந்தது சில ஆண்டுகளா? இல்லை. பல்லாண்டுகளா? அதற்கு மேலும், ஆயிரம் ஆண்டுகளாக, நாம் இந்நாட்டில் வாழ்ந்து வருகிருேம். வாழையடி வாழையாக, இத்தனை நெடுங்காலம் நாம் வாழ்ந்து வரும் பாரதம் நம் தாய்நாடு. தாயும் தந்தையும் மகிழ்ந்து குலாவிஞர்களே! அதோடு நின்ார்களா? இல்லை.