பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J4 எல்லோரும் வாழும் சூழ்நிலையை உருவாக்காவிட் டால், எல்லோர்க்கும் நாட்டின்பால் எப்படிப் பிடிப்பு ஏற்படும்? நாற்பதுகோடி இந்திய மக்கள். "கஞ்சி குடிப்பதற்கிலார்-அதன் காரணம் இவையென்னும் அறிவுமிலார்’ என்னும் நிலையில், இன்றும் அவதிப்படுவது யாருக்கும் பெருமையில்லை. நம் பாரத நாட்டுக்கும் நல்லதல்ல. இந்நிலையை மாற்றியாக வேண்டும்; விரைவில் மாற்றி யாக வேண்டும். இத்தகைய நல்லெண்ணத்தில் ஊன்றி, சிந்தித்தால், தெளிந்த நல்லறிவு பிறக்கும். அந்த அறிவு எதைக் காட்டும்? s இந்திய நில்மனைத்தும், அனைவருக்கும் சொந்தம். கங்கையும், காவிரியும், பிரமபுத்திராவும், தாமிரபரணி யும், கோதாவரியும், கிருஷ்ணையும் எல்லோர்க்கும் „..._GO)L.65)LD.- i. நாட்டின் கனிவளங்கள் எங்கிருந்தாலும்,அங்கே இருப் பவர்களுக்கு மட்டுமல்லாது, அனைவருக்கும் சொத்தாகும். இத்தெளிவினைப் பெற்றுச் செயல்படவேண்டும்.அச்செயல் மின்னல் வேகத்தில் வெற்றி கொடுக்காது, மன்னர்கள் காலமாயின், அவர் மனத்தில் நல்லது ஊன்றிவிட்டால், விரைந்து நாட்டுக்கே நல்லதாக விளைந்து விடும். அக் காலம் மலையேறிவிட்டது. நாமோ மக்கள் ஆட்சிக் காலத்தில் குடியிருக்கிருேம். இன்று மக்கள் முடிவே எல்லாமும் ஆகும். அவர்களுக்கு எல்லோரும் வாழவேண்டும், ஒன்ருக வாழவேண்டுமென்னும் உணர்வை ஊட்டவேண்டும்.