பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

リ அதை அடைவதற்கான மாற்றுத்திட்டங்களை, எடை போட்டு முடிவு செய்யும் திறமையைக் கொடுக்கவேண்டும். அத் திறமையைப் பெறுவது எப்படி? கேள்வி ஞானம், ஒர்வழி; தானே படித்தல் மற்ருேர் வழி. இந்த இரண்டும் வழியும் தேவை. இரண்டும் சேரும்போது மின்னும் நற்சிந்தனையே, குடியாட்சிக்கு உறுதியான கடைக்கால். நம் நாட்டுப் பொதுமக்களுக்கு இரண்டும் கிடைப்ப தில்லை. நம் இந்திய விடுதலைக்குப் போராடிக்கொண்டிருந்த காலகட்டத்தில், தேசிய மேடைகளில், பெரும்பாலும் கொள்கை விளக்கங்கள் முழங்கின. சிற்சிலபோதே தூற்றல் பதர்கள் பறந்தன. மற்ற மேடைகளிலும், அதே அளவில் இல்லாவிட்டா லும், பெருமளவு மாற்றுக் கொள்கைகள், திட்டங்கள் எடுத்துரைக்கப்பட்டன. விடுதலை பெற்றபின் கேட்பதென்ன? கொள்கை விளக் கங்களா? நிந்தனை மழைகளா? ஆண்டுக்கு ஆண்டு கொள்கை விளக்கங்கள் குறைந் தன. நிந்தனை மழைகள் வலுத்தன. முப்பது ஆண்டுகளாகத் திட்டல் தூறல்களிலேயே, நிந்தனே மழைகளிலேயே நனைந்து வருகிறது, நம் சமுதாயம். எனவே, பொதுக்கூட்டங்களின் வழியாகப் பெற்று வந்த விளக்கம், அறிவுத் தெளிவு, அருகிவிட்டது.