பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᏭᏮ தானே படித்துத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பாகிலும் பெருகிற்ரு? இல்லையே! வெள்ளையன் ஆண்டபோது, இந்தியர்களில் நூற்றுக்கு எண்பது பேர்கள், எழுதப் படிக்கத் தெரியாத தற்குறிகள். இந்தக் கொடுமைக்கான பழியை வெள்ளையர்மேல் சுமத்திவிட்டுத் தப்ப முயன்ருேம். தப்பவிடவில்லை, காந்தி யடிகள். "இந்தியர்களில் கோடிக்கணக்கானவர்கள், தத்தம் பெயர்களைக்கூட எழுதத் தெரியாதிருப்பது, இந்தியாவிற்கு அவமானம்' என்று சுட்டிக் காட்டினர். படித்தவர்களாகிய நாம், அதைத் துடைக்காதிருப்பது கொடிய பாவமென்று, இடித்துரைத்தார். முதியோர் எழுத்தறிவித்தலை, தமது பதின்ைகு ஆக்கத் திட்டங்களில் சேர்த்தார். இதை நிறைவேற்றச் சொன்ஞர். காந்தியடிகளே, சிலவேளை வழிபடுகிருேமே அன்றி. பின்பற்றுகிருேமோ? விடுதலை பெற்று முப்பதாண்டுகளாகியும், நம்மவர்கள் - நாற்றுக்கு எழுபது பேர் தற்குறிகளாகவே இருப்பது, அவ மானமல்லவா? இதற்கு ஒரு வழிகாண வேண்டாமா? முதியோர் எழுத்தறிவு என்ருல் என்ன? முதியவர்கள், நாள்தோறும் வழங்கும் முந்நூறு நானுாறு சொற்களை, எழுதவும் படிக்கவும் கற்றுக் கொள்வு தாகும்.