பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

đ1 என்று சுதந்திரப் பள்ளுப் பாடினர். நாட்டுப் பற்ருளர் களின் தியாகம், அதை மெய்யாக்கிவிட்டது. விடுதலையும் நம் கைக்கு வந்தது. ஆங்கிலேயனிடம் இருந்து விடுதலை பெற்ற பிறகு, தன்னாட்சி இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்பதையும் கோடிட்டுக் காட்டுகிருர் பாரதியார். விடுதலையென்பது, வெறும் ஆட்சி மாற்றத்தோடு நிற்கக்கூடாது. வெள்ளையன் ஆணையிட்ட இடங்களில், நம்மவர் அமர்ந்து ஆணையிடுவதை மட்டுமே, விடுதலையாகக் கருத் முடியுமா? முடியாது. மக்கள் அனைவருக்கும் உரிமை வேண்டும்; அனைவரும் சமத்துவம் பெறவேண்டும். குறைகளே எடுத்துச்சொல்ல உரிமை; அவற்றைச் சுட்டிக்காட்டி எழுத உரிமை தேவை. மாற்றுத் திட்டங்களைச் சொல்லவும் உரிமை தேவை. 'நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம்-இது நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்-இந்த பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்: என்று ஒர் நாள் இந்தியர்கள் முடிவு செய்வார்கள் என் பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த பாரதியார், அந்நாள், 'பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே." என்று எக்காளமிட்டார். அந்நிலையில் யாரும் பிச்சை (யெடுத்துப் பிழைப்போரைக் கும்பிட்டு நிற்கலாமா? ஆகாது. எனவே, ошт.—3