பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கைதட்டலுக்கே போட்டி போடும் பொதுத் தொண்டர்கள், அடக்குமுறை அடைமழை ஆகியவற்றிற்கு இடையே வாழ்ந்தார், பாரதியார். சோர்வூட்டும் இச் சூழ்நிலையிலும் சோர்வுபடவில்லை, இவர். தனி வாழ்க்கையில் வறுமை வாட்டினலும், சமுதாயச் சூழல் இருண்டு கிடந்தாலும், மனமுடையாத சுப்பிரமணிய பாரதி, தொலைநோக்கோடு, தன் நாட்டை, இந்தியாவைப் பார்க்கிரு.ர். அன்று, இந்திய மக்கள் அடிமையில், மடிமையில், மிடியில் மூழ்கிக் கிடந்தாலும், அதுவே நிலையானது அல்ல என்னும் தெளிவு பெற்ருர். காலம் மாறும்; மக்களும் மாறுவார்கள்; இந்தியர் களுக்கும் விடுதலை உணர்வு கொப்புளிக்கும்; அப்போது நாட்டுரிமை கிட்டும். இது காலத்தின் கட்டளை என்னும் நம்பிக்கை பிறக்கிறது. எனவே, வெள்ளேயன் ஆளும் போதே, வெள்ளையனே வெளியேறு என்று வீரமுழக்கம் கேட்பதற்குப் பல்லாண்டு முன்பே, தேசிய கவி பாரதியார், ஆனந்தப் பள்ளு பாடு முெர். மிதந்து வரும் கருமேகங்களேயும் கிழித்துக் கொண்டு வந்து, ஒளி காட்டும் ஞாயிறைப் போனறு, மகாகவி பாரதியாரும், ஆடுவோமே-பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று ஆடுவோமே-பள்ளுப் பாடுவோமே.