பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 இருள் சூழ்ந்த அந்த விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே உள்ள, ஒரே தொடர்பு மழையே: அடைமழையே! இத்தகைய இயற்கைச் சூழலில், பலரும் முடங்கிக் கிடப்பார்கள்; சோர்ந்து கிடப்பார்கள்; அஞ்சிக் கிடப்பார் கள் தாழ்ந்து கிடப்பார்கள்: இதுவே. கோடி கோடி மக்களின் இயல்பு. கோடி கோடி சாதாரண மனிதர்களுக்கு நடுவில், எங்கோ ஒருவர் தலை நீட்டுவார்; தொலை நோக்கோடு வருவார்; துணிவோடும் தெம்போடும் வருவார். "தீமையெல்லாம் அழிந்துபோம்; திரும்பிவாரா" என்னும், இயற்கை மருமத்தை நன்கு உணர்ந்தவர் அவர். அத் தெளிவு, அவருக்கு அசையாத நம்பிக்கையை ஊட்டும். நல்ல எதிர்காலத்தை அவர் உணர்வார். மற்றவர்கள் உணராத வேளையிலும், அவர் தெளிவாக உணர்வார். அத்தகையோர், பேச்சிலும் எழுத்திலும் பாட்டிலும் கருத்துக்களோடு நம்பிக்கையும் பெறலாம். இசையோடு திசையும் தெரியும். கோடியில் ஒரு வீரராகப் பாரதியார் விளங்குகிரு.ர். உயிரூட்டும், திசை காட்டும், முடுக்கிவிடும் பாடல்கள் பலவற்றைப் பாரதியார் பாடியுள்ளார். அரசியல் அடிமை வாழ்வு. அதைப்பற்றி வெட்கப் படாத பொது மக்கள். இழந்த உரிமையைத் திரும்பப் பெறும் துடிப்பிலும், சமுதாயத்தில் உயர்ந்தவர்கள் என்னும் நினைப்பைத் தியாகஞ் செய்ய முன்வராத தேச பக்தர்கள்.