பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தேடு கல்வி யிலாததோ ரூரைத் தீயினுக் கிரை யாக மடுத்தல் கேடு தீர்க்கும் அமுதமென் அன்ன கேண்மை கொள்ள வழியிவை கண்டீர் என்கிருர், மகாகவி சுப்ரமணிய பாரதியார். மிரள வேண்டாம். தேசிய கவி பாரதியார் இந்து: சமணரல்லர்: நாத்திகரல்லர் என்பதை நினைவில் கொள் வோம். o கல்லாமையின் மேல் பொங்கியெழும் சினத்தால், கல்லாத ஊருக்குக் கனல் மூட்டச் சொல்லுவதைக் கவனிப் போம். கல்லாமைக் கொடுமையை ஒழிப்பதே பாரதியின் குறிக்கோள் என்பதை உணர்வோம்: உணர்ந்து செயல்படு வோம். காந்தி வழியைப் பின்பற்றி, படித்தவர் அனைவரும் எழுத்தறிவிப்பு வேள்வியில் குதிப்போம்; இன்றே குதிப் போம். எந்த ஊரையும் தீயிட்டுக் கொளுத்தத் தேவையில் லாத நன்னிலையை உருவாக்குவோம். 5 சுற்றிப் பார்க்கிருேம்; எட்டுத் திக்கிலும் கெளவும் இருள். மருண்டு அண்ணுந்து பார்க்கிருேம். அங்கேயும் ஒளித்துளிகள் இல்லே. கருமேகங்கள் படல்படலாக மூடிக் கொண்டிருக்கின்றன.