பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 அரசியல் விடுதலைக்குப் போராடும் வாய்ப்பைப் பெருதவர்கள், இனித்தானே நாட்டுக்குத் தொண்டாற்ற வேண்டும். தங்கள் பங்காக, சமுதாய சமத்துவத்திற்குப் போராடும் பொறுப்பு, பெரும்பாலோரின் தனிப்பொறுப்பு ஆகும். இப்பொறுப்பை நிறைவேற்றுவதில் முனைப்புக் காட்டு வதே, பாரதியைப் போற்றும் சிறந்த வழியாகும். அன்னிய ஆட்சியிலிருந்து விடுபட்ட, இணைந்த 'ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை ஜாதியில் இழிவுகொண்ட மனிதரென்பது இந்தியாவில் இல்லையே, வாழி கல்வி செல்வம் எய்தி மனமகிழ்ந்து கூடியே மனிதர் யாரும் ஒருநிகர் சமானமாக வாழ்வமே' என்று பாரதி கம்பீரமாக முழங்கினர். இது ஒரு தனி மனிதரின் தனிப்பட்ட ஆசையல்ல. படம் போட்டு எடுக்கப்பட்ட உண்மையான வீரரின், உத்தமமான நாட்டுப் பங்காளரின், தூய்மையான தியாகி யின், பொதுக்கட்டளே; அன்புக்கட்டளே. அதை நிறைவேற்றி வைத்த பிறகே, நாம் ஒயலாம். அதுவரை, பாரதியே பாடியபடி, - ஒயுதல் செய்யோம்; தலை சாயுதல் செய்யோம்' என்று தாம் சூளுரைத்துக் கொள்ளவேண்டும். அரசு உரிமை பெற்று, முப்பதாண்டுகள் கழிந்த பிறகும், நம்மிடையே உயர்ந்ததோர், தாழ்ந்தோர் என்னும் உணர்வினை விட்டு வைக்கலாமா?