பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தாழ்த்தப்பட்டவர்கள், எத்தனை காலத்திற்கு ஒதுக் கப்பட்டவர்களாவும், ஒடுக்கப்பட்டவர்களாகவும் நீடிப் பது? இத்திமைகள் தொலையட்டும்; விரைந்து முறியட்டும்: சமத்துவம் மலரட்டும்; நொடியில் மலரட்டும். மனிதன் காலத்தின் கருவிலே உருவாகிருன். அதன் கலப்பு மிக்க இயல்புகளோடு தோன்றுகிருன். அவ்வியல்புகளில் நல்லனவும் இருக்கும்; தீயனவும் ஒட்டியிருக்கும். தியதைக் கோதி எரியவேண்டும். நம் சமுதாய உணர்வுகளில் வழிவந்த, காலத்துக்கு ஒவ்வாத, தேவையற்ற உணர்வுகள் சேர்ந்துள்ளன. பொய்ம்மை சேர் பழமை, மக்களைச் சாதி அடிப்படை யில் பிரித்து வைக்கும் கொடுமை, ஒழிய வேண்டும்; விரை வில் விலக வேண்டும். எனவே பாரதியாரோடு சேர்ந்து நாமும், சென்றுபோன பொய்யெலாம் மெய்யாகச் சிந்தைகொண்டு போற்றுவாய் போ! போ! போ! சாதி நூறு சொல்லுவாய் போ! போ! போ! -- திே நூறு சொல்லுவாய், காசொன்று நீட்டினல் வணங்குவாய் போ! போ! போ! தீது செய்வ தஞ்சிலாய், கின்முன்னே தீமை நிற்கில் ஓடுவாய் போ! போ! போ! என்று முழங்கவேண்டும். அந்தத் துணிச்சலைப் பெறு Gouгтцогт ? மாலைப் போதில் இருக்கும் இந்தியர்கள் மட்டும். சமத்துவாதிகளாக இருந்தால் போதாது.