பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 அத்தனை நாடுகளுக்கும் உரியது. இதுவே அனைத்து நாடுகளின் நடைமுறை. இங்கோ, ஒர் நாட்டைச் சேர்ந்த ஒர் மாநிலம், முற்கால ஜெர்மனியாக உருவெடுக்கிறது. பல்லாண்டுகளாக் நமக்கு நாமே வளர்த்துக்கொண்ட கிட்டப்பார்வை, இன்னும் எத்தனை இழப்புகளுக்கு இடம் கொடுக்குமோ? இனியாவது நம் பார்வை விரியட்டும்; உரிமையின் பரப்புத் தெரியட்டும். பாரத தேசமென்று தோள்கொட்டு வோம். அப்போது நுழைவுச் சீட்டோடு அல்லாது, உரிமையோடு, வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்: அப்போது எவருடைய தயவும் அனுமதியுமின்றி,

  • கங்கை நதிப் புறத்துக் கோதுமைப் பண்டம் காவேரி வெற்றிலக்கு மாறுகொள்ளுவோம்: அதுமட்டுமா? அறிவுப் பரிமாற்றம் வேண்டுமே! அதுவும் நிகழும்.

'சிங்க மராட்டியர் தம் கவிதைகொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்' இன்றைய சூழ்நிலையிலும், சின்னஞ்சிறு நாடுகள் தன்னாட்சி உரிமையோடு உள்ளனவே! இப்படியிருக்க பெரிய நாடு எதற்கு என்று குழம்புவோர் உண்டு. சித்திரக் குள்ளர்கள் கூட, நெடுநாள் உயிரோடு இருக் கிருர் கள். அதற்காக, ஆறடி மனிதர் நாலடிக் குள்ளர் களாகச் சிறுக்கவேண்டுமா? வேண்டாம். இளேய பாரதம், விழிப்புற்ற பாரதமாக, எல்லோரை யும் வாழவைக்கும் விரிந்த பாரதமாக், மலர்வதற்குச்