பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 அடுத்து, அரை நிர்வாணப் பக்கிரியின் படத்தைப் பார்க்கிருேம். முன்னிரு படங்களிலும் இல்லாத மோகனப் புன்னகை பார்ப்பவர்களின் நெஞ்சைக் கொள்ளை கொள்ளுகிறது. இதுவாகிலும் புதியதொரு மனிதரின் படமா? இல்லை. வெவ்வேறு தோற்றங்களை வழங்கும் ஒரே மோகனதாஸ் கரம்சந்த் காந்தியையே மூன்று படங்களிலும் கண்டோம். நாடு என்னும் சொல்லின் பொருளும், காலக் காட்சியில் வெவ்வேறு அளவாக, வகையாக, அமைகிறது. - நாம் வாழும் இந்தக் காலத்தில் எது தாய்த்திருநாடு? இணைந்த இந்தியாவே தாய்த்திருநாடு, பாரதி பாடியபடி: "மன்னும் இமயமலை எங்கள் மலையே மாநில மீதிது போற் பிறிதிலையே இன்னறுநீர்க் கங்கையா றெங்கள் யாறே" என்று இந்தியா முழுமைக்கும் உரிமை கொண்டாட வேண்டிய நாம், எங்கோ இருபதிலே ஒன்றுக்கு மட்டுமே உரியவர்கள் என்று ஏமாந்துவிட்டோம், அடுத்த நாடாகிய பங்களா தேசம் உரிமை கொண்டாடி கங்கை நீரில் பங்கு பெறுகிறது. உள்நாட்டைச் சேர்ந்த நமக்கு, கங்கை நீரை அனுப்புவதைப் பற்றி, அந்தப் பகுதியும் சிந்தை செலுத்தவில்லே. நாமும் உரிமைக்குரல் எழுப்ப வில்லை. விளைவு? பக்கத்து மாநிலத்தாரே, காவிரிநீரைக் கட்டுப்படுத்தத் துணிந்து விட்டார்கள். கர்டைகம் என்ன வான மண்டலத்து நாடா? நில மண்டலத்து நாட்டின் ஒர் மாநிலந்தானே! பல நாடுகளின் ஊடே ஓடும் நீர்ப் பெருக்கம், அணைக்கும் நாட்டுக்கு மட்டுமல்ல; வழியிலே உள்ள