பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நாட்டில் ஏதுமறியா முயல்களும் உண்டு; பதுங்கிப் பதுங்கி மெல்லக் கடித்துக்கொல்லும் பாம்பனையோரும் இருப்பார். அடிமை விலங்கை ஒடித்த உரிமை பாரதத்தில் அதே நிலை தொடரலாமா? ஆகாது. இளேய் பாரதம் அப்படி இருக்கலாமா? கூடாது. சமதர்மமே, எல்லோர்க்கும் வாழ்வளிக்கும் என்னும் தெளிவும், அதற்குக் குறுக்கே நிற்கும் சிறுமைகளைக் கண்டு பொங்கும் இயல்பும் பெற்றுவிட்ட இளையபாரதத்தினர் எப்படி யிருக்கவேண்டும்? பாரதியாரின் வரிகளே சொல்லட்டும். 'இன்னல் வந்துற்றிடும் போததற் கஞ்சோம் ஏழையராகி இனி மண்ணில் துஞ்சோம் தன்னலம் பேணி இழிதொழில் புரியோம் தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்' என்பதே, இந்திய இளைஞர்களின் வாழ்க்கை நெறியாக வேண்டும். தாய்த்திரு நாடு எது? இதிலே குழப்பம் கூடாது. பன்னிரண்டு சிற்றுரர்களையே கொண்ட கொல்லிமலை நாடா, நம் தாய்த்திரு நாடு நம் நீண்ட வரலாற்றின் தொடக்கக்காலத்திற்கு அது சரி. அடுத்த ஒர் நிலையில் பல்லவ நாடோ, பாண்டிய நாடோ, சோழ நாடோ, சேர நாடோ தாய்த்திரு நாடு. வாலிபர் காந்தியின் படத்தைப் பார்க்கிருேம். அது பொய் அல்ல; ஒர் கால கட்டத்துப் படம். பின்னர் பாரிஸ்டர் உடையிலுள்ள காந்தியின் படத்தைக் காட்டுகிரு.ர்கள். இது முன்னே பார்த்தி காந்தியின் படமே; வேருெரு காந்தியின் படமல்ல.