பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 வன்மையும் மென்மையும் அவர்களுக்கு வேண்டியளவு வேண்டியபோது தாமே முன்வந்து நிற்கும். மக்களுடைய வாழ்வையும் வளத்தையும் அவர் களுடைய மொழிவளத்தில், இலக்கியச் சிறப்பில், இருந்து பிரிக்க முடியாது. | சிறப்பான வாழ்க்கை, சீரிய இலக்கியத்தைப் பெற் றெடுக்கிறது. சீரிய இலக்கியம், வெறுத்துப் போகும் சோக வாழ்க்கைக்கு உயிருட்டி, வண்ணத்தைக் கூட்டி, நல்ல முறையில் வாழவைக்கிறது. கிரேக்க நாடு இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. உலகம் உள்ளவரையில் அழியாப் புகழ் பெற்றுள்ள கிரேக்க அறிஞர்கள் வாழ்ந்த காலம் ஒன்ருகவும், கிரேக்கப் பேரிலக்கியங்கள் பூத்த காலம் வேருென்ருகவும் இல்லை. மொழி உயர்வு, இலக்கியச் சீர்மை, வாழ்க்கையின் பெருமிதம் ஆகிய மூன்றும், பிரிக்க முடியாதபடி பின்னிக் கிடக்கின்றன. இவற்றைப் புரிந்து கொண்டவர்களே, தெளிந்த அறிவுடையோர் ஆவார். கிரேக்க மொழி, மக்கள் மொழி நிலையிலிருந்து, ஏட்டு மொழி நிலைக்கு மாறிற்று. கிரேக்க வாழ்வும் மாறி விட்டது; ஒளி மங்கிவிட்டது. மொழியை இழந்த மக்கள் முதலில் ஊமையராவர். பிறகு கருத்து அடைபடும் : சிந்தனை தடைபடும். அப்புறம் நெடுமரங்கள் ஆவார்கள். ஒர் புல்லுக்கே பல வேர்கள் இருந்தால், கோடி கோடி மக்களுக்கு ஒரே மொழி என்பது இயற்கைக்கு மாருதுை. y - நெடுங்காலமாக, இந்தியா பன்மொழி நாடாக விளங்கி வருவதில், குறையேதும் இல்லை; தீங்கேதும் இல்லை,