பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 இதைப் பற்றிக் கவலைகொள்ளத் தேவையில்லை. பல மொழிகளும் வளத்தோடும் வலிவோடும் இருப்பது நாட்டுக்கு நல்லது. இந்திய மொழிகளில் ஒன்று தமிழ். அது மட்டுமா? அதன் தொன்மையான மொழிகளில் ஒள்முகவும் விளங்குகிறது, இலக்கியச் செறிவுடையதாகவும் உள்ளது. மேலும் தள்ளாமை வராது, இளந்துடிப்பும் கொண்டு வாழ்கிறது. இக் கன்னித் தமிழ் பாரதியின் சொந்த மொழி. அம் மொழியிடம் அவர் காதல் கொண்டது புதுமையல்ல; இயற்கை. காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு. அந்த அடிப் படையில், பாரதியார், தாய் மொழியாம் தமிழ் மொழி யைப் போற்றினர் இல்லை. தாய்த்தமிழ், வடமொழி, இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளை நன்கு அறிந்த சுப்பிரமணிய பாரதியார், ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவ தெங்கும் காளுேம்' என்று பூரித்தார். அதே நேரத்தில், உள்ளத்தை உள்ள படி உணரும் மதி நுட்பமும், அதை அப்படியே கூறும் துணிவும் பெற்றிருந்த பாரதியார், தமிழ்ச் சமுதாயத்தின் மேல் நாட்டஞ் செலுத்தினர். கல்லாரைக் கண்டார். எங்கோ ஒர் காட்டில் அல்ல. எங்கெங்கும் தற்குறிகள் காட்சியளித்தார்கள்.