பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழககம் செழிக்கச் செய்வீர்!" என்று கட்டளையிட்டார். நாம் ஒவ்வொருவரும் இக் கட்டளையை நம் முதற்கடமையாகக் கொண்டு செயல் பட்டால், சொல்லவுங் கூடுவதில்லை-அவை சொல்லும் திறமை தமிழ் மொழிக்கில்லை’ என்னும் வசை முழங்காதே. நான் பாரதி பாடல்களை, பதினேழு பதினெட்டு வயது களில் முதன் முதல் படித்தவன். அரசு இவற்றைப் படிப் பதைக் குற்றமாகக் கருதிய காலத்தில் படித்தவன். அவ் வயதில் படித்தது. பசுமரத்தானிபோல் பதிந்துவிட்டது. ஆங்கிலம் என்னுடைய கருவி, தமிழ் என் உயிர்; அதற்குத் தொண்டு செய்து வருகிறேன். ஆங்கிலத்தில் எழுதிப் பலன்பெற, வெளிச்சம் பெற, என் மனம் இடங்கொடுப்பதில்லை. எழுதப் பேனவை எடுத்தால், பாரதி முன்னின்று வழி நடத்துகிருர். இதோ அவருடைய வழி காட்டல்: எனக்கும் உங்களுக்கும். 'பிறநாட்டு கல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்' சென்றிடுவி ரெட்டுத் திக்கும்-கலைச் - செல்வங்கள் யாவும் கொணர்ந்தங்கு சேர்ப்பீர்' தமிழர்கள், உலகியல் அனைத்திலும் புலமை பெற்று வருகிருர்கள்; எண்ணற்ற நாடுகளில் குடியேறி வாழ்ந்து வருகிருர்கள்.