பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 பெற்ற வீடு நன்ருக இயந்தால்தான், புகுந்த வீட்டில் மதிப்பார்கள்.

  • h

தாய் மொழியாம் தமிழ், வானமளந்தது. அனைத்தை யும் அளந்து கூறும்போதே வெளிநாட்டுத் தமிழர்களுக்கு மதிப்பிருக்கும். இல்லையேல், கூலிக்காரர்கள் நிறையே. கூலிக்காரர்கள் ஆகவே பிறருக்குக் காட்சி யளிப்பார்கள். பிற மொழிகளிலும் பயிற்சியுடைய தமிழர், சிறப்பாக முன்னேறிய நாடுகளில் வாழும் தமிழர், ஒவ்வொருவரும் தமிழுக்குப் புதுப்புது அணிகலன்களைச் செய்து தருவதை நோன்பாகக் கொள்ளவேண்டும் தாம் பாரத நாட்டின் புதல்வர் என்று பெருமைப்படும் பாரதியார், தாம் தமிழ் நாட்டவர் என்பதை மறக்க் வில்லை; மறைக்கவில்லை; அதற்காக வெட்கப்படவில்லை; பெருமைப்படுகிருர். இந்தியா என்னும் பெருமரத்தின் வேர்களே தமிழ் நாடும் பிறவும். தடந்தோள்களையுடைய ஒருவர், கன் தோள்களைக் காட்டி, பிறரும் இப்படி வலிமைபெற முடியுமென்று கூறு வாரானல், மூ ையையும் கண்களேயும் காதுகளையும் பிற உறுப்புகளையும் பொருட்படுத்த வேண்டாமென்று சொல்லு வதாகப் பொருள் கொள்ளலாமா? ஆகாது. தெளிந்த காட்சியருக்கு, இந்தியப் பற்றுக்கு முரண் பட்டதல்ல, தமிழ் நாட்டுப் பற்று. தமிழ் மொழிப் பற்றும் இந்திய பற்றுக்கு வேர்ப்புழுவாக அமையாது; அமையக் சி.டTது. பொதுமை வேண்டும். அதைச் சொல்விக்கொண்டு, ஏதும் பாடுபடாது அத்திரத்துச் சோற்றுக்குக் காத்துக் கொண்டிருக்கலாமா? கூடாது. Guff.-4 ',*