பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 இந்திய மக்கள் அனைவரும் தய தம் தாம் மொழியைப் பேசவேண்டும்; பயன்படுத்தவேண்டும். நெஞ்சுருக்கும் அத்தனைக்கும் பயன்படுத்த வேண்டும்: வளர்க்கவேண்டும். எல்லாத்துறைகளுக்கும் பயன்படுமாறு வளர்க்கவேண்டும். அப்படிச் செய்யும்போது, ஆதிக்க உணர்விற்கு, மீறந் தும், இடந்தரலாகாது. பல வேர்களிலே ஒரு வேர், மற்ற வற்றை அழுத்தி மிதித்து நலிய வைத்தால் மொத்தத்தில் தீமை. (அதைப்போல ஏதொன்றும் பிறவற்றை மிதிப்பது நல்லது அல்ல). அதே நேரத்தில் தமிழராகிய நாம், மொழித் தீண்டாமையை விட்டுவிடவேண்டும். இந்திய மொழிகள் அனைத்தும் வளர்க்கப்பட வேண்டும்: பயன்பட வேண்டும். பாரதி அறிவுறுத்தியபடி, "--------------------- நன்மையு மறிவும் எத்திசைத்தெனினும் யாவரே காட்டினும் மற்றவை தழுவி வாழ்விராயின், அச்சமொன்றில்லை. என்னும் மகாகவியின் வாக்கு மறுக்க முடியாத உண்மை. 8 புத்தரைப் பெற்றது பெண். சாக்ரடீசைப் பெற்றது பெண். காந்தியைப் பெற்றது பெண். லெனினைப் பெற்றது பெண். பெரியாரைப் பெற்றது? பெண். விசுவேசுவர அய்யாவைப் பெற்றது? பெண்ணே. சி. வி. இராமனைப் பெற்றது: பெண். இரவீந்திரநாத் தாகூரைப் பெற்றது? பெண்.