பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 கவிஞன் காலத்தின் கண்ணுடி; உள்ளதை உள்ளவாறு உரைக்கும் உரம் பெற்ற கண்ணுடி. அவன் உயர்வுகளை உணர்ந்து காட்ட வேண்டும். கீழ்மை கண்டு, பொங்கிப் பாட வேண்டும்.கீழ்மையை .வெறுத்து ஒதுக்கும் வெறியைப் படிப்போர் பெறும் வகையில் பாட வேண்டும். - கவிஞன், அவர் முகத்தையும் இவர் முகத்தை யும், பார்த்து மகிழ்விக்கப்பாடுதல் அகாது, தாட்சணி யப்பட்டுப் பாடவும் ஆகாது. தன் இயற்கையான நல்லுணர்வுகளைத் தங்குதடையின்றி ஒடவிட்டுப் பாட வேண்டும். போற்ற வேண்டியவற்றை போற்ற வேண் டிய அளவு போற்றவேண்டும். கண்டிக்க வேண்டிய வற்றை கண்டிக்க வேண்டிய அளவு கடுமையாகக் கண்டிக்கத் துணியவேண்டும். இவற்றிற்கெல்லாம் மேலாக, கவிஞன் ஒர் மாய வித்தைக்காரனுகவும் இருத்தல் வேண்டும். உள்ள உயர்வுகளைப் பதியவைத்து, மண்டிவிட்ட கொடுமை களைக் களையக் குரல் கொடுப்பது கவிஞனின் கடமை. நீரை உண்ட பசு பாலைப்பொழிவதுபோல், வாழ்க்கைப்பாலையில் வளர்பல முட்களைச் செறித்து, அமுதக் கருத்துகளை வழங்குவது சிறந்த கவிஞர் களின் சீரிய தொண்டாகும். தேசியகவி சுப்ரமணியபாரதியார், மேற்கூறிய இலக்கணங்களுக்கு இலக்கியமாக விளங்கினர். அவர் தமிழ்ப் பொதுமக்களை எண்ணிப் பாடினர். அவர்கள் பெறவேண்டிய நல்லுணர்வுகளை அவர்களுக்கு ஊட்டு வதற்காகப் பாடினர். படிப்போர் புலவரைத் தேடி யலையாமல், அகராதியைப் புரட்டிக்கொண்டு அல்லல் படாமல், எளிதாகப் புரிந்துகொள்ளும் எளிய சொற் களால் பாடினர். உயரிய கருத்துக்களை எளிய சொற்