பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 எனவே அன்பின் வழியை விட்டு, ஆதிக்க வழியைப் பின்பற்றுகிருர்கள். பல்லாயிரம் ஆண்டுகளாக, கூர்தல் அடிப்பட்ையில் வளர்ந்துவந்த பிறகும், கோடிக்கணக்கான வர் இன்றும் மாந்தர் நிலையை எட்டமுடியாதிருக்கும் போது, முற்காலத்தில் எவ்வளவு மட்டமாக இருந்திருப்பார் கள் என்பதை ஊகிக்கலாம். அன்று மனைவியை அடக்கத் தொடங்கினது, இன்று எங்கோ தள்ளியுள்ளது நம்மை. உண்மையும் உரிமையும் இயற்கையாகக் கொப்பளிப்பதற்குப் பதில், பொய்மையும், அடிமைப்புத்தியும், அங்கு இங்கு எதைபடி எங்கும் கோலோச்சுகின்றன. இந் நிலையைக் கண்டார் பாரதியார்: குமுறினர் பாரதியார். அவர் இயற்கையின் மைந்தர்; உண்மையின் சுடர், உரிமையின் ஞாயிறு. ஞாயிறு, யாருக்குச் சுடும்: சுடாது என்று பார்க்கலாமா? கூடாது. சுரீரென்று உறைப் பதே அவன் கடமை. அதைப் போன்று, பாரதியாரும், பெண்டாட்டி தனையடிமைப் படுத்தவேண்டி பெண்குலத்தை முழுதடிமைப் படுத்தலாமோ?! என்று கேட்கிரு.ர். இது நம் உணர்வில் சுரீரென்று பாய வேண்டும். குருதியில் கலக்கவேண்டும். அதன் விளைவாக நம் வாழ்க்கைமுறை மா வேண்டும். ஏன்? பயிரின்மேல் உள்ள நாட்டத்தால் நிலத்தைப் பேணு கிருேம். அதே போல், மக்கள் இனத்தின்மேல் உள்ள அக்கறையால், மக்களின் நிலமாகிய பெண்ணினத்தின் நலத்தையும் உரிமையையும் பேணிக் காக்கவேண்டும். கம்பு விளையும் மண், கரும்பு விளையப் பயன்படாது: ஏலம் விளையும் உயர்நிலம், மாகொழிக்கப் பயன்படாது.