பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 சமுதாயத்தில் எல்லாத் தட்டுகளிலும் உள்ளன. அக் குடும்பங்களில் வளரும் நங்கைகள் குலத்து மாதர்கள்" ஆவார்கள். அத்தகையோர், உரிமை பெற்று Aாழ்தல் நன்மையே. அடிமை பெற்று வளர்த்தல் தீமையாகும். எல்லோரும் குலத்து மாதர்களாகும் சூழ்நிலையை உரு வாக்குவது, முற்போக்கு சமுதாயத்தின் தலையாய கடமை. புதுமைப் பெண்கள், செம்மை மாதர்களாக, சீருடனும் சிறப்புடனும் விளங்குவார்கள். அவர்களிடம், "நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கு மஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கு மிருப்பதால்? செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்' இப்புது வழியைக் கண்டு, நாம் மிரளக்கூடாது. இரவு முழுவதும் தொழுவத்திலே அடைப்பட்டுக் கிடந்த கன்று, திறந்துவிட்டதும் துள்ளிக் குதிந்து எங்கோ ஒடும். அதற்கு அஞ்சிக் கன்றை அடைத்தே வைத்திருக்கலாமா? ஆகாது. நெடுநேரம் செக்கிலே பூட்டி வைக்கப்பட்டிருந்த மாடு, அவிழ்துவிட்டபோதும் முன்னேருது, சுற்றி வருதலும் உண்டு. அதைப்போல், உரிமைபெற்ற புது யுகத்திலும். நம் பெண்கள், பழமையைச் சுற்றிவருவது காணுத காட்சியல்ல. இது, பெண்களுடைய உரிமைகளைப் பறிக்கச் சாக்காகக் கூடாது; வாய்ப்பு மறுக்குமளவு நம்மை மயக்கக் கூடாது. இனி, அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில் அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்: மகாகவி சுப்பிரமணி பாரதியின்,