பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 விடுதலை முரசு கொட்டிய கவியரசர் பாரதி, எல்லா வற்றிலும் முழுமையான காட்சியைப் பெற்று இருந்தார். வீட்டிலே அடிமைத்தனத்தை வளர்த்தால், அது கால ஒட்டத்தில் நாட்டையும் கெளவிக்கொள்ளும். ஊர்களைச் சாதியின் பேரால் பிளவுபடுத்தி வைத் திருந்ததன் விளைவு, நாட்டிலும் பிளவுகள். கொள்கைகள் வேறுபடுவது இயற்கை. அவற்றின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் மாறுபடுவதும் இயற்கை. கட்சிகள், நாட்டுக்காகவே கொள்கைகள் என்பதை மறந்து, பாழ்செய்யும் குழுக்களாக நின்று உட்பகையை வளர்ப்பது நோய்; பொல்லாத நோயாகும். அரசியல் விடுதலை, அரசியல் அரங்கங்களோடு முடங்கிக் கிடத்தல் ஆகாது. குடும்ப வாழ்க்கையிலும் உரிமையொளி வீச வேண்டும். கவி சுப்பிரமணிய பாரதி வாழ்ந்த காலத்தில், இந்தியா வில் உரிமையொளி, நாட்டிலும் இல்லை; வீட்டிலும் இல்லை. பெண்கள் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருந் தார்கள். எனவே அறிவிலோ, ஆற்றலிலோ, பொதுத் தொண்டிலோ, வளரவேண்டிய நிலைக்கு அவர்கள் வளர முடியவில்லை. இது அநீதி: தீங்கு. இதைக் கண்டு, பொங்கிற்று, பாரதியாரின் சினம். பெண்கள் விடுதலைக் கும்மியிலே அவருடைய சினம் ஒளிவிடுகிறது.